திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஓய்வு பெற்ற முதன்மை நீதிபதிக்கு பிரிவு உபச்சார விழா.

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஓய்வு பெற்ற முதன்மை நீதிபதிக்கு பிரிவு உபச்சார விழா.

ஓய்வு பெற்ற திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி கே. பாபுவுக்கு
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் நடைபெற்ற பிரிவு உபச்சார விழா திருச்சியில் இன்று நடந்தது.

மூத்த வழக்கறிஞர் ஸ்டானிஸ்லாஸ் ,குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் முல்லை சுரேஷ், குற்றவியல் வழக்கறிஞர்கள்சங்க செயலாளர் பி. வி. வெங்கட், துணைத் தலைவர் சசிகுமார், இணை செயலாளர் விஜய நாகராஜன், பொருளாளர் கிஷோர் ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர் . இந்நிகழ்வில் தலைமை குற்றவியல் நீதிபதி மீனா சந்திரா மற்றும் நீதிபதிகள் மகாலட்சுமி, ஜெயப்பிரதா, மணிமேகலை, சுபாஷினி, கே.ஆர். பாலாஜி, சிவகுமார், எம்.பாலாஜி, அரசு வழக்கறிஞர் சவரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி. வெங்கட் செய்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்