பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தை தீயிட்டு சேதப்படுத்திய இருவர் கைது.

பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தை தீயிட்டு சேதப்படுத்திய இருவர் கைது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ராமச்சந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த காமுசாமி மகன் கணேஷ்குமார் (28) என்பவர் தற்போது பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு செவல்பட்டி பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கியிருந்து ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை மாலை தெற்கு செவல்பட்டி பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில் வைத்து அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் அருள்குமார் (30) மற்றும் ஞானராஜ் மகன் தினேஷ்குமார் (20) ஆகிய இருவரும் மதுஅருந்தி கொண்டிருந்தபோது அங்கு வந்த கணேஷ்குமார் தனது அக்கா வீட்டில் மட்டும் ஏன் கோயில் வரி வாங்குவதில்லை என்று கேட்டதையடுத்து கணேஷ்குமார் மற்றும் அவர்கள் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அனைவரும் கலைந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று  அதிகாலை தெற்கு செவல்பட்டி பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த கணேஷ்குமாரின் இருசக்கர வாகனம் மர்ம நபர்களால் தீ வைத்து சேதப்படுத்தியது கணேஷ்குமாருக்கு தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கணேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் பசுவந்தனை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி கணேஷ்குமாரிடம் ஏற்கனவே தகராறில் ஈடுபட்ட அருள்குமார் மற்றும் தினேஷ்குமார் ஆகிய இருவரும் கணேஷ்குமாரின் இருசக்கர வாகனத்தை தீ வைத்து சேதப்படுத்தியது தெரியவந்தது.

இதனையடுத்து பசுவந்தனை காவல் நிலைய ஆய்வாளர் திரு. முத்துமணி மேற்படி எதிரிகள் அருள்குமார் மற்றும் தினேஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தார். மேலும் இதுகுறித்து பசுவந்தனை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்