திருச்சி வரகனேரியில் ஸ்ரீ குழுமியானந்தா சுவாமிகளின் 124ஆவது குருபூஜை. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.
திருச்சி வரகனேரியில் ஸ்ரீ குழுமியானந்தா சுவாமிகளின் 124ஆவது குருபூஜை. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.
திருச்சி வரகனேரியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ குழுமியானந்தா சுவாமிகளின் 124ஆவது குருபூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருச்சி மாநகரம் வரகனேரி குழுமிக்கரையில் திருக்கோவில் கொண்டு எழுந்தருளி இருப்பவர் ஸ்ரீ குழுமியானந்தா சுவாமிகள்.
வரகனேரி பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலின் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ குழுமியானந்தா சுவாமிகளின் 124 வது குருபூஜை இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
குருபூஜையை முன்னிட்டு காலை
காவிரியில் இருந்து திருமஞ்சனம் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீ குழுமியானந்தா சுவாமிகள் வார வழிபாட்டு குழுவினரின் திருமறை, திருப்புகழ் திருஅருட்பா ஆகியவற்றை பாராயணம் செய்தனர். அதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாதரனை காட்டப்பட்டது.
தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் குருபூஜை விழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நிறைவடைகிறது.