சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் குண்டத் தடுப்புச் சட்டத்தில் கைது.

காவல் ஆணையர் காமினி அவர்கள் அதிரடி நடவடிக்கை

சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் குண்டத் தடுப்புச் சட்டத்தில் கைது.

கடந்த 10ம் தேதி கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலக்கரை கீழப்புதூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து சிறுமிகளை பாலியல் தொழில் ஈடுபடுத்தி வருவதாக பெறப்பட்ட  புகாரின் பேரில் பாலக்கரை துரைசாமிபுரத்தை சேர்ந்த எதிரி பானு மற்றும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் உட்பட ஆறு நபர்கள் சேர்ந்து சிறுமிகளை வற்புறுத்தியும், மிரட்டியும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வழக்கின் எதிரியான பானு சிறுமிகளை வற்புறுத்தியும் மிரட்டியும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துபவர் என விசாரணையில் தெரிய வந்ததால், மேற்படி எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கை களை தடுக்கும் பொருட்டு கோட்டை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த மாநகர காவல் ஆணையர் திருமதி காமினி அவர்கள் மேற்படி எதிரியினை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மகளிர் தனிச்சிறையில் இருந்து வரும் எதிரி  மீதான குண்டர் தடுப்பு ஆணை சார்பு செய்யப்பட்டு குண்டர் தடுப்பு காவலின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் இதே வழக்கில் சம்பந்தப்பட்ட திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எதிரிகள் ரவிக்குமார் அசோக் அபி நிஷா பானு என்ற பியாரி பானு ஆகிய நான்கு எதிரிகள் மீது திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் ஆணையின்படி ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் திருச்சி மாநகரில் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகர காவல் ஆணையரின் இந்த செயலை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

 

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்