மானாமதுரையில் அரசுடைமை வங்கியில் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற வரை புதன்கிழமை போலீஸார் கைது செய்தனா்.

மானாமதுரையில் அரசுடைமை வங்கியில் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற வரை புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அண்ணா சிலை அருகேயுள்ள  ஒரு வங்கியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஜன்னல் கம்பிகளை உடைத்தும், பிரதான வாயில் கதவு பூட்டை வெடிமருந்தைப் பயன்படுத்தி உடைத்தும் மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து லாக்கரைத் திறக்க முயன்ற முயற்சியில் தோல்வியடைந்து, பின்னர் தப்பிச் சென்றது தெரிய வந்தது.

இது குறித்து மானாமதுரை போலீஸார் வழக்குப் பதிந்து வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, அதில் ஒரு நபர் வங்கியில் புகுந்து கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது. விசாரணையில் அவர்  மானாமதுரை மேட்டுத் தெரு இன்னாசிமுத்து நகரைச் சோ்ந்த அழகா்சாமி மகன் பிரசாந்த் (31) எனத் தெரியவந்தது. போலீஸார் அவனை  கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ். சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்தில் குற்றவாளியைக் கைது செய்த தனிப்படை ஆய்வாளர் நாகராஜன், தலைமைக் காவலா்கள் வேல்முருகன், பிரபு, முதல் நிலைக் காவலா்கள் சதீஷ்குமாா், சக்கர மணிகண்டன், ராஜா, நாகமணிமாறன் ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்