நெல்லை மாநகர காவல் ஆணையாளர் மகேஸ்வரி தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் மகேஸ்வரி தலைமையில் காவல் துணை ஆணையாளர்கள் சரவணகுமார் மேற்கு, அனிதா தலைமையிடம் மற்றும் சரக காவல் உதவி ஆணையாளர்கள் திருநெல்வேலி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் மற்றும் காவல் துறையினருடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நெல்லை மாநகரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, பான் மசாலா மற்றும் மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய பொருள்களின் விற்பனையை எவ்வாறு கண்டறிவது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்பர்களை கண்டறிந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்வது போன்றவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்