திருவரங்கம் வீரேஸ்வரம் தேவி கருமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா. அன்னதானம் வழங்கப்பட்டது.

திருவரங்கம் வீரேஸ்வரம் தேவி கருமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா. அன்னதானம் வழங்கப்பட்டது.

திருவரங்கம் வீரேஸ்வரம் மேலத்தெரு தேவி கருமாரியம்மன் கோவிலில் 34 -ம் ஆண்டு சித்திரைத் திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதை யடுத்து கரகம், பால்குடம் காவிரி ஆற்றில் இருந்து எடுத்துவரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. நேற்று அன்னதானம் நடைபெற்றது. இதையடுத்து அம்மன் திருவீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை மாலை 7 மணிக்கு விடையாற்றி உற்சவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை வீரேஸ்வரம் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்