திருச்சி கண்டோன்மென்ட் பென்வெல்ஸ்ரோடு முத்து மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா. இன்று பால்குடம் தீர்த்த ஊர்வலம் நடந்தது.

திருச்சி கண்டோன்மென்ட் பென்வெல்ஸ்ரோடு முத்து மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா. இன்று பால்குடம் தீர்த்த ஊர்வலம் நடந்தது.

திருச்சி கண்டோன்மெண்ட் பென் வெல்ஸ் ரோடு முடுக்கு தெருவில் அமைந்துள்ள பாலகணபதி, கருப்பண்ண சுவாமி, ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் 16-ம் ஆண்டு சித்திரைத் திருவிழா முகூர்த்தக்கால் ஊன்றுதலுடன் தொடங்கியது. 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு அம்மனுக்கு யாக வேள்வி, அபிஷேகம், கருப்பண்ணசாமிக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளி கவசம் சாத்துதல், மகாதீப ஆராதனை ஆகியவை நடந்தது .அதன் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னர் மாலை 6 மணி அளவில் நீதிமன்றம் விநாயகர் கோவிலில் இருந்து முளைப்பாரி எடுத்து வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது .நேற்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், நீர்மோர், பானகம் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு மாவிளக்கு பூஜையும், அதனை தொடர்ந்து சங்கர கட சதுர்த்தியும் நடைபெற்றது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 5 மணிக்கு குடமுருட்டி அய்யாளம்மன் கோவிலில் இருந்து பால்குடம் தீர்த்த ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் 6 மணிக்கு உற்சவம் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்தார். பின்னர் நாளை காலை 9 மணி அளவில் விடையாற்றி பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்