கொலை வழக்கில் தேடப்பட்டவர் வாகன சோதனையில் கைது.

கொலை வழக்கில் தேடப்பட்டவர் வாகன சோதனையில் கைது.

திருச்சியில் கடந்த ஆகஸ்ட் மாதம் வண்ணாரப்பேட்டை வாசு கொலை வழக்கு திருச்சி முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது. இதில் ஏழாம் குற்றவாளியான நாகசுந்தரம் என்பவரது மகன் சோமசுந்தரம் வழக்கில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார் .

இதனைத் தொடர்ந்து திருச்சி அமர்வு நீதிமன்றம் 3.08.23 அன்று சோமசுந்தரத்தை கைது செய்ய பிடிகட்டளை பிறப்பித்து இருந்தது. தொடர்ந்து தேடப்பட்ட வந்த நிலையில் நேற்று மதியம் மருத்துவமனை காவல் நிலைய அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அங்கு வந்த சோமசுந்தரத்தை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சோமசுந்தரத்தை சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்