மத்தியில் ஆட்சி மாற்றம் அவசியம். சலுகைகள், திட்டங்கள் தடையின்றி கிடைத்திட தீப்பெட்டிக்கு வாக்களியுங்கள். மதிமுக வேட்பாளர் துரை வைகோ பிரச்சாரம்.

மத்தியில் ஆட்சி மாற்றம் அவசியம். சலுகைகள், திட்டங்கள் தடையின்றி கிடைத்திட தீப்பெட்டிக்கு வாக்களியுங்கள். மதிமுக வேட்பாளர் துரை வைகோ பிரச்சாரம்.

திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோதொகுதி முழுவதும் சுழன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் திமுக புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை ஆகியோர் தலைமையில்,புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் வடக்கு ஒன்றியம் அம்மாசத்திரம்,
நார்த்தாமலை ஆகிய ஊர்களில்,
தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்கு கேட்டு பொதுமக்களிடையே உரையாற்றினார்.

தொடர்ந்து குன்றாண்டார்கோவில் ஒன்றியம் தென்னங்குடி,
வைத்தூர், மூட்டாம்பட்டி ,
திருமலைராயபுரம், உப்பிலியக்குடி,
வாழமங்கலம், செனையக்குடி, அண்டக்குளம், பெரியதம்பி உடையாம்பட்டி, பெரம்பூர், வீரக்குடி ஆகிய ஊர்களில், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். சென்ற இடமெல்லாம் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து துரை வைகோவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது பொதுமக்கள் மத்தியில் துரை வைகோ பேசியதாவது:-
திமுக தலைமையிலான தமிழக அரசு கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் கொடுத்த வாக்குறுதிகளை 80 சதவீதம் நிறைவேற்றி உள்ளது. 10 ஆண்டுகால ஆட்சியில் பாஜகவினா் எதையுமே செய்யவில்லை. ஆகவே, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் 100 சதவிகிதம் மக்களின் தேவைகளை பூா்த்தி செய்ய முடியும் அதற்காக எனக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் . மத்திய அரசிடமிருந்து நமக்கு கிடைக்க வேண்டிய திட்டங்களையும், சலுகைகளையும் தடையின்றி பெற வேண்டுமானால் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது முக்கியம்.
தற்போது ஆட்சியில் உள்ள பாஜக வை முற்றிலும் அகற்ற திருச்சி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக களம் காணும் என்னை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பிரசாரத்தில் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்