மகளிர் உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம் வழங்கியது திராவிட மாடல் அரசு : விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது. அருண் நேருவை ஆதரித்து கமல் பிரசாரம்.
மகளிர் உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம் வழங்கியது திராவிட மாடல் அரசு : விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது. அருண் நேருவை ஆதரித்து கமல் பிரசாரம்.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண்நேருவை ஆதரித்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமலஹாசன், பெரம்பலூர் சங்கு பகுதியில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மகளிர் உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம் வழங்கியது திராவிட மாடல் அரசு. நாம் தரும் வரிப்பணத்தில்
29 பைசா மட்டுமே நமக்கு தருகிறது. மத்திய அரசு,மீதி 71 பைசா எங்கே செல்கிறது,வடக்கேயும் அந்தப் பணம் செல்லவில்லை. கிழக்கத்திய கம்பெனியை விரட்டினோம், அதேபோல் மேற்கத்திய கம்பெனி இப்போது நம் நாட்டிற்குள் நுழைகிறது,அந்த கம்பெனியை நாம் விடக்கூடாது. இ.டி., ஐ.டி.யை வைத்து மிரட்டுகின்றனர், ஒத்துவராவிடில் முதல்வர்களை கைது செய்கின்றனர்.
கேஸ் விலை உயர்வு, விவசாயிகள் கண்ணீர் என்று மத்திய அரசு துரோகம் செய்கிறது.
சாப்பாடு கொடுத்து படிக்க வைக்கும் அரசு வேண்டுமா, நுழைவுத்தேர்வை திணிக்கும் அரசு வேண்டுமா?
அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கும் அரசு வேண்டுமா? ஜனாதிபதி ஆனாலும் வெளியே நிற்க வைக்கும் அரசு வேண்டுமா?தமிழ் நாட்டில் காந்தி,நேரு என்று பெயர் வைக்கிறோம். வடநாட்டில் காமராஜர், அண்ணா என்று யாரும் பெயர் வைப்பதில்லை என்றும் பேசினார்.
இந்த பிரச்சாரத்தில், பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன்,மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர்,சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், எஸ்.நல்லதம்பி,தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ஒன்றிய பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன்,
மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், துணை அமைப்பாளர்கள் டி.ஆர்.சிவசங்கர்,ஆர்.அருண், அ.அப்துல்கரீம், வ.சுப்ரமணியன், மா.பிரபாகரன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.ராசா, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர் கே.ஜி.மாரிக்கண்ணன்,
மக்கள் நீதி மையம் நிர்வாகி கவிஞர் சினேகன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சுரேஷ், ம.தி.மு.க.மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ரமேஷ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமை கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.