மாநில கராத்தே போட்டியில் திருச்சி மாணவ,மாணவிகள் சாதனை.
மாநில கராத்தே போட்டியில் திருச்சி மாணவ,மாணவிகள் சாதனை.
மாநில அளவிலான கராத்தே போட்டி பெரம்பலூர் ராமகிருஷ்ணா கல்லூரியில் நடைபெற்றது. இதில். தமிழ்நாடு முழுவதும் இருந்து 500 க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில் திருச்சி தேசிய கல்லூரி மாணவர் ஜெட்டிஸ் சோனி கத்தா பிரிவில் முதல் இடம் பெற்றார். தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாய் கிருஷ்ணா, சாய் சூரஜ் , யுவராஜ் ஆகியோர் 2 மற்றும் 3வது இடம் பெற்றார்கள்.
திருச்சி திருவரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி மூன்றாம் ஆண்டு பயோ டெக்னாலஜி படித்து வருபவர் ரசிகா. இவர் கராத்தே வீரர் ஜெட்லியிடம் பல்வேறு பயிற்சிகளை பெற்றவர். மாநில அளவிலான கராத்தே போட்டியில் பெண்கள் கத்தா பிரிவில் இரண்டாம் இடம் பெற்றார். அதேபோல் கோட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி கின்னஸ் உலக சாதனையாளர் சாய்னா ஜெட்லி கத்தா பிரிவிலும்,குமிட்டே பிரிவிலும்மூன்றாம் பரிசு பெற்றார். ஸ்ரீ சங்கரா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி அப்சரா கத்தா பிரிவிலும், குமிட்டேபிரிவிலும் மூன்றாம் இடம் பெற்றார்.
சிறப்பு விருந்தினராக கல்லூரி நிறுவனர் சிவசுப்பிரமணியம் கலந்து கொண்டு பாராட்டி பரிசு வழங்கினார். தமிழ்நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட கராத்தே மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியை பெரம்பலூர் யூனிக் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மனபூ சோட்டா கான் கராத்தே சங்கம், ரென்சி அகிலன் மற்றும் அவரது குழுவினர் செய்து இருந்தனர்.