திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகள விளையாட்டு போட்டிகள்.
திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகள விளையாட்டு போட்டிகள்.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
திருச்சி ரயில் ஜங்ஷன் கல்லுக்குழி ரயில்வே விளையாட்டு மைதானத்தில் காவேரி ஸ்போர்ட்ஸ் அகாடமி, ரயில் ஸ்போர்ட்ஸ் கிளப், முனைவர் நல்லுசாமி அண்ணாவி தடகள அகாடமி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
இப்போட்டியில் 6 வயது முதல் 16 வயது வரை உள்ளவர்களுக்கான பல்வேறு பிரிவுகளில் ஒட்டபந்தயம் நீளம் தாண்டுதல் தொடர் ஒட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது இப்போட்டிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் மாணவர்களுக்கான சீனியர் பிரிவில் என். வி அகடாமியை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் முதல் இடத்தையும், மாணவிகளுக்கான பிரிவில் காவேரி ஸ்போர்ட்ஸ் அகடாமியை சேர்ந்த விளையாட்டு வீராங்கனைகள் முதல் இடத்தையும் ஜூனியர் பிரிவில் மாணவர்களுக்கான பிரிவில் ரயில் ஸ்போர்ட்ஸ் கிளப் விளையாட்டு வீரர்கள் முதல் இடத்தையும் மாணவிகள் பிரிவில் செயிண்ட் ஜேம்ஸ் பள்ளியை சேர்ந்த வீராங்கனைகள் முதல் இடத்தை பிடித்து வெற்றி பெற்றனர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தொழில் அதிபர் ஜெரோம் ஆரோக்கியராஜ் மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் ஆ. சுப்ரமணி சர்வதேச தடகள விளையாட்டு வீரரும் பயிற்ச்சியாளருமான நல்லுசாமி அண்ணாவி தேசிய போல் வால்ட் விளையாட்டு வீரர் தமிழரசன் கால்பந்து விளையாட்டு வீரர் சிவக்குமார் தேசிய தடகள விளையாட்டு வீரர் கமால் தேசிய விருது பெற்ற குறும்படத்தின் நடிகரும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியூமான ஆர்.ஏ.தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் களை வழங்கினர்.
இப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கவோரி ஸ்போர்ட்ஸ் அகாடமியின் நிர்வாகியும் தடகள பயிற்சியாளருமான முனியாண்டி உடற்கல்வி இயக்குனர் சுரேஷ் பாபு மற்றும் குழுவினர் செய்திருந்தனர்