திருச்சி கொடாப்பு, காராகி அம்மன் கோவிலில் குட்டிகுடி திருவிழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.
திருச்சி கொடாப்பு, காராகி அம்மன் கோவிலில் குட்டிகுடி திருவிழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.
திருச்சி உய்யக்கொண்டான் திருமலை அருகே கொடாப்பு பகுதியில் அமைந்துள்ள காராகி அம்மன் கோவில் குட்டி குடி திருவிழா நேற்று நடைபெற்றது.
கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கிய இந்த விழாவில் மார்ச் 4ம் தேதி மறுக்காப்பு கட்டுதலும், 5ம் தேதி காளி ஓட்டம், 6ம் தேதி சுத்த பூஜை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து திருவிழாவில் முக்கிய நிகழ்வான குட்டி குடித்தல் திருவிழா நேற்று நடைபெற்றது.
இந்த குட்டிக்குடி திருவிழாவில் மருளாளி கொடாப்பு பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் வலம் வந்து (ஆட்டுக்கிடா) குட்டி குடித்தார். தொடர்ந்து அப்பகுதி முழுவதும் தேர் உலா வந்தது.
இந்த நிகழ்ச்சியில் திமுக தில்லைநகர் பகுதி செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான நாகராஜ், திமுக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள், முக்கிஸ்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவிழா காரணமாக கொடாப்பு பகுதி முழுவதும் திருவிழா கோலம் பூண்டிருந்தது