ராமேசுவரத்தில் இந்துக்கள் திதி கொடுக்க, பிண்டம் வைக்க கட்டணம் வசூலிக்கக்கூடாது விசுவ இந்து பரிஷத் மாநில தலைவர் கண்டனம்.

திருச்சியில் கிராம கோவில் பூஜாரிகள் பேரவை மாநில பொதுகுழு கூட்டம்:

ராமேசுவரத்தில் இந்துக்கள் திதி கொடுக்க, பிண்டம் வைக்க கட்டணம் வசூலிக்கக்கூடாது

விசுவ இந்து பரிஷத் மாநில தலைவர் கண்டனம்.

ராமேசுவரத்தில் இந்துக்கள் திதி கொடுக்க, பிண்டம் வைக்க கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று திருச்சியில் கிராம கோவில் பூஜாரிகள் பேரவை மாநில பொதுகுழு கூட்டத்தில் விசுவ இந்து பரிஷத் மாநில தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி கண்டனம் தெரிவித்தார்.

மாநில பொதுக்குழு கூட்டம்
கிராம கோவில் பூஜாரிகள் பேரவை, அருள்வாக்கு அருள்வோர் பேரவை ஆகியவற்றின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. நிர்வாக அறங்காவலர் வேதாந்தம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர், ‘பூசாரிகளுக்கு கடவுளை தவிர வேறு எதுவும் தெரியாது. நாம் எந்தவொரு அரசியல் கட்சியையும் சேர்ந்தவர்கள் அல்ல. நாம் இனியும் கிணற்று தவளையாக இருக்கக்கூடாது. ஆக்கப்பூர்வமான சமுதாயம் அமைய முயற்சிகள் எடுக்கவேண்டும். இந்து மதத்தின ஆணி வேர் பூசாரிகள். ஆனால் சிலர் வேரை வெட்ட முயற்சி செய்கின்றனர்’ என்றார்.

விசுவ இந்து பரிஷத் மாநில தலைவர் தினமலர் வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி முன்னிலை வகித்து பேசும்போது கூறியதாவது:-
தமிழகத்தில் பூசாரிகளிடம் மட்டும் 30 லட்சம் ஓட்டு உள்ளது. இந்த எண்ணிக்கை ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த கூடிய ஓட்டு வங்கி. 60 வயதை கடந்த பூசாரிகளுக்கு இந்த ஓய்வூதியம் முழுமையாக கிடைக்கவில்லை. இதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியது போல் பூசாரிகள் அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் ஊதியம் வழங்கவேண்டும்.

கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்

நாம் தர்மத்தின் பக்கம் நின்று நமது உரிமைகளை பெற போராடவேண்டும். ஒவ்வொரு பூசாரியும், குடும்பத்தினரை பூசாரிகள் பயிற்சி முகாமில் பங்கேற்க செய்யவேண்டும்.
கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்று வலியுறுத்தி வரும் வேளையில், ஜிஸ்யா வரி போன்ற ஒரு கட்டண நிர்ணயத்தை தமிழக அரசு செய்திருப்பது கண்டனத்துக்குரியது. ராமேசுவரத்தில் இந்துக்கள் தமது முன்னோர்களுக்கு திதி கொடுக்க ரூ.200-ம், பிண்டம் வைக்க ரூ.400-ம் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று பிறப்பித்துள்ள உத்தரவை உடனடியாக திரும்ப பெறவேண்டும். இது மோசமான முன்னுதாரணம். இந்த உத்தரவு ரத்து செய்யப்படாவிட்டால் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது போல் கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத ஊதியம் ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெற ஆண்டு உச்சவரம்பை ரூ.1 லட்சத்து 20 ஆயிரமாக உயர்த்த வேண்டும். கோவில்களுக்கு கட்டணமில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்