ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் தமிழ்நாடு தேர்தல் அறிக்கை வெளியீடு.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் தமிழ்நாடு தேர்தல் அறிக்கை வெளியீடு.
வருகிற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் தேர்தல் அறிக்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் மாநில செயலாளர் முகமது காசிம் திருச்சியில் இன்று நிருபர்களிடம் கூறும்போது,
பாராளுமன்றத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இருக்கிறது.
புதிதாக தேர்வு செய்யப்பட இருக்கிற ஒன்றிய அரசுக்கு நாட்டின் தற்போதைய அரசியல் சமூக பொருளாதார சூழ்நிலையை பொருத்தும், பொதுமக்களின் கருத்துகளை இந்த தேர்தல் அறிக்கையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் அனைத்து அடிப்படை உரிமைகள் கிடைக்கச் செய்யும் மக்கள் நலன் சார்ந்த புதிய அரசு அமைய வேண்டும்.சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோர்க்கு பாதுகாப்பு கிடைக்கும் தேவையான சட்டங்களை இயற்றி, நடப்பில் உள்ள சட்டங்களை திருத்தம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.வேளாண்துறை புத்துயிரூட்டும் வண்ணம் ஒருங்கிணைந்த திட்டம் வகுத்து நடைமுறைப்படுத்தபட வேண்டும்.சிறூபான்மையினருக்குகல்வி, வேலை வாய்ப்பில் 15 சதவீதம் இடஒதுக்கீடு மற்றும் மொழி பாதுகாப்பு , அதிகார பங்கீடு வழங்க வேண்டும்.என்று கூறினார்.
பேட்டியின் போது, மண்டல அமைப்பாளர் சையது முஹம்மது, செய்தி தொடர்பாளர் நவாஸ் கான், சாலிடாரிட்டி தமிழக மாநில இளைஞர் தலைவர் கமாலுதீன் ஆகியோர் உடனிருந்தனர்.