கோவில்பட்டியில் டிராக்டர்-பைக் மோதி விபத்து – ராணுவ வீரர் பலி.

கோவில்பட்டியில் டிராக்டர்-பைக் மோதி விபத்து – ராணுவ வீரர் பலி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜுவ் நகர் 6வது தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் மகன் பொன்னுராஜ் (42). அருணாச்சலப் பிரதேசத்தில் ராணுவத்தில் பணியாற்றி வந்த இவர் விடுமுறைக்கு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) கோவில்பட்டியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்து வரும் தனது மகன் சாய்கிரிஷை(4) அழைத்துக் கொண்டு துரைசாமிபுரத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். பொன்னுராஜ் ஓட்டிச் சென்ற பைக் கோவில்பட்டி -இளையரசனேந்தல் சாலையில் உள்ள சுரங்க பாதையில் சென்று கொண்டிருந்தபோது சாத்தூர் புதுப்பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் ஓட்டிச் சென்ற டிராக்டர்-பைக் மோதியதில் பொன்னுராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாய் கிரிஷ் காயமடைந்தார்.

தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற மேற்கு காவல் நிலைய போலீஸார் காயம் அடைந்த வரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கி அனுப்பி வைத்தனர். சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து சுரேஷ்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்