பெரம்பலூரில் அருண் நேரு நிற்க கோரி மத்திய மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரெ.மதனா விருப்ப மனு.

பெரம்பலூரில் அருண் நேரு நிற்க கோரி மத்திய மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரெ.மதனா விருப்ப மனு.

திருச்சி மாவட்ட தொண்டரணி அமைப்பாளராக இருப்பவர் ரெ.மதனா. இவர் ஒரு அரசுப்பள்ளி ஆசிரியர். தற்போது இவர் தன்னுடைய அரசு ஆசிரியை பணியை விட்டு விட்டு முழு நேர அரசியல் பணியாற்றி வருகிறார். மத்திய மாவட்ட தொண்டரணி அமைப்பாளராகவும் இருந்து கட்சிப் பணியாற்றி வருகிறார்.ஏற்கனவே பல அமைப்புகளில் மாநில தலைவியாக இருந்து பொதுத்தொண்டு செய்துவந்த நிலையில்
தற்போது கட்சிப்பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறார்.

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் பெரம்பலூர் தொகுதியில் அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு போட்டியிட விருப்ப மனு கொடுத்து பணமும் கட்டியுள்ளார். இதே போன்று கழக தொண்டர்கள் பலரும் தலைமை கழகத்தில் அருண் நேரு பெரம்பலூரில் நிற்ககோரி விருப்ப மனு தந்து பணம் கட்டி வருகின்றனர்.

இன்று மட்டும் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்தனர்.மேலும் இதனைத்தொடர்ந்து ஏராளமான பேர் விருப்ப மனு கட்ட காத்திருக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்