நள்ளிரவு நடந்த கார் மோதிய விபத்தில் இருவர் படுகாயம்.
திருச்சியில் நள்ளிரவு நடந்த கார் மோதிய விபத்தில் இருவர் படுகாயம்.
விழுப்புரம் மாவட்டம் முகம்மதியார் பேட்டையை சேர்ந்தவர்கள் ஒரு காரில் திண்டுக்கல் சென்று மீண்டும் விழுப்புரம் திரும்பினர். மகமதியார்பேட்டையைச் சேர்ந்த சுப்பராயலு காரை ஓட்டினார். கார் திருச்சி தீரன் நகர் பகுதியில் வந்தபோது, திடீரென இருசக்கர வாகனம் ஒன்று சாலையின் குறுக்கே சென்றதால்,கார் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்சி நீதிமன்ற (செசன்ஸ் கோர்ட்) போலீஸôர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.