பிரபல ஓட்டல் பெண் ஊழியர் திடீர் மாயம். போலீசார் விசாரணை.

திருச்சியில் பிரபல ஓட்டல் பெண்

ஊழியர் திடீர் மாயம். போலீசார் விசாரணை.

திருச்சி கருமண்டபம் வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் வேம்பு ராஜ் இவரது மகள் கௌசல்யா (வயது 21). இவர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் சம்பளம் வாங்கி வருவதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது தாயார் ராஜேஸ்வரி மகளிர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார் .ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை .

அதை தொடர்ந்து செசன்ஸ் கோர்ட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜ கணேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்