திருச்சியில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.
திருச்சியில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.
முத்தரப்பு ஒப்பந்தத்தில் அவசரமாக அமல் படுத்த முயற்சி செய்வதை கண்டித்தும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை மூன்றாக பிரிப்பதை கைவிட வேண்டும். ஸ்மாட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். வாரிசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு உடனே வேலை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி தென்னூர் மின்வாரிய அலுவலகத்தில் தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு திருச்சி பெருநகர வட்டக்கிளை தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் சிவச்செல்வன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். வட்டக்கிளை செயலாளர்கள் அன்புசெல்வன், தனராஜ், அன்பழகன், செந்தில்குமார், எம்.எஸ்.மணி, அர்ச்சுனன், மகளிர் அணி நிர்வாகிகள் ஜெசிந்தா, சுமதி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.