ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி அதிமுக மாணவரணி சார்பில் இலவச மருத்துவ முகாம்

ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி அதிமுக மாணவரணி சார்பில் இலவச மருத்துவ முகாம்

மாநில செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் என்று தொடங்கி வைத்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாளை ஒட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மாபெரும் ரத்த தான முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாம் இன்று மேலசிந்தாமணியில் மாணவரணி மாவட்ட செயலாளர் இன்ஜினியர் இப்ராம்ஷா தலைமையில் நடந்தது. முகாமை மாநில மாணவரணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் தொடங்கி வைத்தார்.

மாவட்டச் செயலாளர்கள் குமார் சீனிவாசன் அமைப்பு செயலாளர்கள் ரத்தினவேல் மனோகரன், முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மாணவரணி மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா தலைமையில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் மாநில பேரவை துணைச் செயலாளர்கள் ஜோதி வாணன்,கவுன்சிலர் அரவிந்தன்,மாவட்ட துணைசெயலாளர் கள் வனிதா, பத்மநாதன், ஆகியோர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்