கஞ்சா,போதை பொருள் விற்பனையை தடை செய்ய வேண்டும் என்று மனு
மாவட்ட ஆட்சித் தலைவரிடம்
பா.ம.க. திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர்| பி.கே.திலீப்குமார்
திருச்சி மாநகர் பகுதியில் தங்கு தடையின்றி நடக்கும் கஞ்சா,போதை பொருள் விற்பனையை தடை செய்ய வேண்டும் என்று மனு கொடுத்தார்.
திருச்சி தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் திலீப்குமார் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலெக்டர் பிரதீப்குமாரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
திருச்சி மாநகர பகுதியில் தங்கு தடை இன்றி கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. மேலும் அனைத்து கடைகள் மற்றும் தேநீர் கடைகளிலும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் ஹான்ஸ் ,மற்றும் புகையிலை ,மற்றும் கூலிப் உள்ளிட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் எல்லா இடங்களிலும் தங்கு தடை இன்றி கிடைக்கின்றது பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வாழ்க்கை சீர்கேடாகி வருகின்றது .அந்த போதை பொருட்களை உபயோகித்து விட்டு பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களிலும் பள்ளி மாணவர்கள் செல்லும் இடங்களிலும் இடையூறு ஏற்படுத்துகின்றனர். காந்தி மார்க்கெட், பாலக்கரை பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை அமோகமாக செயல்பட்டு வருகிறது . மேலும் திருச்சி புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் கொட்டப்பட்டு அருகிலுள்ள டாஸ்மாக் கடை,ஏர்போர்ட் பகுதி, தென்றல் நகர் பகுதி உள்பட திருச்சி மாநகரில் இயங்கும் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி சாராயம் விற்பனை அமோகமாக செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் குடித்து விட்டு பொதுமக்கள் மாணவர்கள் மாணவிகள் வாகனஓட்டிகள் பேருந்துகள் மீது பாட்டில்களை அடிப்பதும் நடு ரோட்டில் பாட்டில்களை உடைப்பதும் செவிசாய்க்க முடியாத வார்த்தைகளால் திட்டுவதும் மேலும் குடித்து விட்டு இரண்டு சக்கர வாகனங்களை ரேஸ் விடுகிறார்கள் இதனால் பொதுமக்கள் இடையூறாக உள்ள இந்த கடைகளை அகற்ற வேண்டும். இனியும் காலதாமதம் ஆகாமல் மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை வேண்டும். அப்படி எடுக்கவில்லை என்றால் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக மாபெறும் போராட்டம் நடைபெறும் என்பதை இதன் மூலம் தெரிவித்து கொள்கிறோம் .
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில்
மாவட்ட அமைப்பு செயலாளர் எழிலரசன்.ஒன்றிய செயலாளர் ஐயப்பன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் அரிஹரன் செயலாளர் ரபிக்.பாலக்கரை பகுதி கண்ணன் ஏர்போர்ட் பகுதி செந்தில். மலைக்கோட்டை பகுதி செந்தில்.மணி.மற்றும் பலர் உடன் இருந்தனர்.