திருச்சி,பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிகளில். அதிமுக வேட்பாளர்கள் வெற்றிக்கு ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.
திருச்சி,பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிகளில். அதிமுக வேட்பாளர்கள் வெற்றிக்கு ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.
புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக கூட்டத்தில் தீர்மானம.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூராட்சி மற்றும் சார்பு அணி மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தில்லைநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை வகித்து, ஆலோசனைகள் வழங்கிப் பேசினார்.
கூட்டத்தில், காவிரி மேலாண்மை ஆணையம் தனது வரையறுக்கப்பட்ட பணி வறம்புக்கு அப்பாற்பட்டு 28வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேகதாதுவில் காவிரி ஆற்றின் அணை கட்டுவது பற்றி விவாதித்து மேல் நடவடிக்கைக்காக மத்திய நீர்வள கமிஷனுக்கு அனுப்பியதை கண்டித்தும், தமிழகத்தில் காவிரி நதிநீர் விஷயத்தில் துரோகம் இழைத்துவரும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், கர்நாடகம் 2023–24ம் ஆண்டுக்கு காவிரியில் தமிழகத்திற்கு தரவேண்டிய பங்கு நீரை பெற்றுத்தராத திமுக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் 29ம்தேதி மாலை 4 மணிக்கு தஞ்சாவூர் திலகர் திடலில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்டத்தில் இருந்து திரளாக கலந்து கொள்வது, திருச்சி, பெரம்பலூர் லோக்சபா தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் ஒன்றிணைந்து சிறப்பாக தேர்தல் பணியாற்றுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், அமைப்புச் செயலாளர் மனோகரன், ஜெ.பேரவை இணை செயலாளர் செல்வராசு, முன்னாள் அமைச்சர் பூனாட்சி, எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் பொன் செல்வராஜ், மாவட்ட இணை செயலாளர் இந்திராகாந்தி,மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஜெயம் ஸ்ரீதர், மாவட்ட மீனவர் அணி செயலாளர் பேரூர் கண்ணதாசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார்,கோப்பு நடராஜ் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.