திருச்சியில் 6 வயது பள்ளி மாணவர் புதிய உலக சாதனை.

திருச்சியில் 6 வயது பள்ளி மாணவர் புதிய உலக சாதனை.

திருச்சி சேர்ந்தவர்கள் மணிகண்டன் – மோனிகா. இவர்களுடைய மகன் சோகன் .திருச்சியில் தெப்பக்குளம் பிஷப் ஹீபர்நர்சரி பள்ளியில்இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பிரபல கராத்தே கிராண்ட்மாஸ்டர் கின்னஸ் உலக சாதனையாளர் டாக்டர் டிராகன் ஜெட்லியிடம் கராத்தே, யோகாசனம் பயிற்சி பெற்று வருகிறார். கராத்தே பயிற்சியில் மஞ்சள் பெல்ட் பெற்றவர். புதிய உலக சாதனை படைக்கும் முயற்சியாக யோகாவில் சிறந்த கடினமான உயர்ந்த யோகாசனமான சிரசாசனம் 13 நிமிடங்கள் தலைகீழ் நின்றுபுதிய உலக சாதனை படைத்தார்.

இவற்றை நேரில் ஆய்வு செய்து ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் கின்னஸ் உலக சாதனையாளர் டாக்டர் டிராகன் ஜெட்லிபுதிய உலக சாதனைக்கான சான்றிதழ் பதக்கம் கேடயம் வழங்கி பாராட்டினார் .உலக சாதனை படைத்த மாணவனை பள்ளி ஆசிரியர்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டினர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்