திருச்சி மணிகண்டத்தில் இன்று அதிகாலை துணிகரம்: வங்கி ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி.
திருச்சி மணிகண்டத்தில் இன்று அதிகாலை துணிகரம்: வங்கி ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி.
அலாரம் அடித்ததால் கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்.

திருச்சி மாவட்டம் திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள மணிகண்டம் பகுதியில் மணிகண்டம் யூனியன் அலுவலகம் அருகே அரசு வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது இதற்கான ஏ.டி.எம் இயந்திரம் வங்கியின் முகப்பு பகுதியில் தனி அறையில் உள்ளது .
இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் அந்த ஏ.டி.எம்.மை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
அப்பொழுது ஏடிஎம் அலாரம் அடிக்கவே அவர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளனர்.
இது குறித்து ஏ.டி.எம் மேலாளர் மணிகண்டம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஏ டி எம் இல் இரவு காவலாளி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.