திருச்சி மாநகரில் கஞ்சா, லாட்டரி விற்றதாக 7 பேர் கைது.
திருச்சி மாநகரில் கஞ்சா, லாட்டரி விற்றதாக 7 பேர் கைது.
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்பதாக வந்த தகவலையடுத்து, மணிமண்டப சாலை காந்தி சிலை அருகில் சப்-இன்ஸ்பெக்டர் சோனியா காந்தி தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்றதாக முருகன் என்பவரை கைது செய்தனர் .அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல் கோட்டை, பாலக்கரை பகுதிகளில் வெளி மாநில மூன்று டிஜிட் லாட்டரி சீட்டுகள் விற்றதாக சண்முகம், அந்தோணி ராஜ். நாராயணசாமி, கார்த்திக் ,மற்றொரு கார்த்தி, சுப்பிரமணி ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.