சுற்றுச்சூழல் துறை சார்பாக திருச்சி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு காற்று மாசு தடுப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான தீர்வு குறித்த போட்டிகள்.
சுற்றுச்சூழல் துறை சார்பாக திருச்சி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு
காற்று மாசு தடுப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான தீர்வு குறித்த போட்டிகள்.

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சார்பாக, திருச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவர் – மாணவியர் பங்கேற்கும் பேச்சுப்போட்டி மட்டும் ஓவியப்போட்டிகள் 15.02.2024 அன்று பொன்மலைப்பட்டி திரு இருதய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றற்றது 222 மாணவர்- மாணவியர் மற்றும் 18 ஆசிரியர் – ஆசிரியைகள் பங்கேற்றனர். காற்று மாசு தடுப்பு மற்றும் காலநிலை மாற்றம் பாதிப்புகளில் இருந்து தீர்வு பற்றிய கருத்துகளை பேச்சு மூலமாகவும், ஓவியங்கள் மூலமாகவும் மாணவர்கள் எடுத்துரைத்தனர்.
போட்டிகளை துவக்கி வைத்து பேசிய தலைமை ஆசிரியர் திரு ச. ஜஸ்டின் திரவியம், காற்று மாசு முறியடிக்க நிறைய மரங்கள் வளர்த்து சுற்றுச்சூழல் மேம்பட வேண்டுகோள் விடுத்தார். அறிமுக உரை நிகழ்த்திய திருச்சி கல்விமாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் திரு இ. சகாயராஜ், இயற்கை வளங்களை பாதுகாத்து, இயற்கையோடு இணைந்து வாழவேண்டுமென கேட்டுக்கொண்டார். பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் திரு ஞா. பிரபாகரன் சம்பத் குமார், சுற்றுச்சூழல் வாழ்வியல் முறைகளை கடைபிடித்து நற்சுகத்துடன் வாழ வலியுறுத்தினார்.
பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய திருச்சி மாவட்டம் பசுமைத்தோழன் திரு காட்வின் கி நிஜில், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பகளை விவரித்து, பருவங்களில் வரவேண்டிய மழை கிடைக்கவும், பருவம் தவறி பெய்யும் மழையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவும் , இயற்கை சார்ந்த வாழ்வியல் முறைகளுக்கு திரும்ப வேண்டுமென கேட்டுக்கொண்டார். தமிழ்நாடு பசுமை இயக்கம் பற்றி விளக்கிய வனச்சரக திரு தீ.கிருஷ்ணன், மரங்கள் நமக்கு நேரடியாக தரும் பயன்களையும், மறைமுகமாய் வழங்கும் நன்மைகளையும் எடுத்துரைத்தார். வீட்டைச்சுற்றியும், வயல்வெளிகளிலும்,. பொது இடங்களிலும், மரங்கள் வளர்க்க அனைவரையும் கேட்டுக்கொண்டார். திருச்சி மாநகராட்சி 45 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி சீதாலட்சுமி முருகானந்தம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் துணிப்பைகள் வழங்கப்பட்டன.

பள்ளியின் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் திரு ஆர். ஆண்டனி லூயிஸ் வரவேற்றார்.லால்குடி கல்விமாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் திரு அ . கிரிகோரி சுற்றுச்சூழல் துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், வனத்துறை, திருச்சி மாநகராட்சி அனைவருக்கும் நன்றி கூறினார். வனத்துறை சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டன.