அரசு போக்குவரத்து கழக ஒய்வு பெற்றோர் நல அமைப்பினர் திருச்சியில் இன்று போராட்டம்.
அரசு போக்குவரத்து கழக ஒய்வு பெற்றோர் நல அமைப்பினர் திருச்சியில் இன்று போராட்டம்.
நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு.
நீதிமன்ற தீர்ப்புகளை அமல்படுத்தி தமிழக அரசின் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து, போக்குவரத்துக் கழகத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வு மற்றும் ஓய்வு பலன்களை வழங்கிட வேண்டும், 2003 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 2022 டிசம்பர் முதல் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பணியில் காலமான பணியாளர்களின் குடும்பங்களுக்கு பணப்பலன்கள் வழங்கிட வேண்டும். வாரிசு வேலை அனைவருக்கும் உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் திருச்சி மண்டல அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு போராட்டம் இன்று நடந்தது.
போராட்டத்திற்கு திருச்சி மண்டல தலைவர் சேகர் தலைமை தாங்கினார். காரைக்குடி மண்டல மாநில துணைத்தலைவர் பவுல்ராஜ், புதுக்கோட்டை மண்டல மாநில துணைத்தலைவர் இளங்கோவன், திருச்சி மண்டல மாநில துணைச் செயலாளர் சின்னசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் திருச்சி மண்டல துணைப் பொதுச் செயலாளர் பூபதி நன்றி கூறினார்.
இந்த போராட்டத்தில் திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி மண்டல ஓய்வூதியர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.