திருச்சியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மு. பரஞ்சோதி தலைமையில் நடந்தது.

திருச்சியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
மு. பரஞ்சோதி தலைமையில் நடந்தது.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூராட்சி மற்றும் சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் திருச்சி கட்சி அலுவலகத்தில் நடந்தது.

புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சர்
மு.பரஞ்ஜோதி தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர்கள் முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி, ஆர்.மனோகரன், அம்மா பேரவை இணை செயலாளர் செல்வராசு, கழக மகளிரணி இணை செயலாளர் பரமேஸ்வரி முருகன், மாவட்ட இணை செயலாளர் இந்திராகாந்தி, பொருளாளர் சேவியர்,
சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், ஜெயலலிதா பேரவை அய்யம்பாளையம் ரமேஷ், பாசறை சோனா விவேக், வண்ணான் கோவில் முத்துக்குமார்,
மாவட்ட துணை செயலாளர் கோவிந்தராஜன், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சுப்பு,
வக்கீல் அணி மாவட்ட இணை செயலாளர் வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார், ஸ்ரீரங்கம் ரவிசங்கர், மாணவரணி விஷன் பழனிச்சாமி
மற்றும் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், நகர, ஒன்றிய, பகுதி, பேரூராட்சி கழக செயலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வருகிற 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கிய கொண்டாடுவது, வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளிலும் நவரசம் பன்னீர் கலை குழுவினரின் தெருமுனை பிரச்சார கூட்டத்தை சிறப்பாக நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்