கொரோனா காலத்தில் காணாத ஊரடங்கை தற்போது புனே நகரம் கண்டு வருகிறது. அந்தளவுக்கு கொசு சூறாவளி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. புனேவின் முத்தா ஆற்றின் மீது சுழன்று கொண்டிருக்கும் இந்த கொசு சூறாவளி வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.காரடியில் உள்ள முலா-முத்தா ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்ததே இந்த கொசு சூறாவளி க்கு காரணம் எனத் தெரிய வந்துள்ளது. உபரி நீரை அகற்றும் பணியை 2 நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டதாக புனே மாநகராட்சி தெரிவித்த போதிலும், இன்னும் நிலைமை கட்டுக்குள் வரவில்லை என்பது தான் கடைசி கட்ட தகவல்.