திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் கொடியேற்று விழா மாவட்ட செயலாளர் பாரதிதாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.
திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் கொடியேற்று விழா
மாவட்ட செயலாளர் பாரதிதாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் மணப்பாறை வையம்பட்டி மருங்காபுரி, மணிகண்டம், அந்தநல்லூர் பொன்னம்பட்டி சிறுகமணி திருவரங்கம் பகுதிகளில் தேமுதிக கொடி நாளை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் சன்னாசிப்பட்டி ஆர்.பாரதிதாசன் தலைமையில் கொடியேற்று விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட அவைத் தலைவர் ஒன்றிய கவுன்சிலர் அர்ஜுன், மாவட்ட பொருளாளர் வசந்த் பெரியசாமி, மாவட்ட துணைச் செயலாளர்கள் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் முல்லை சந்திரசேகர், சி எம் ராஜேந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் துரைராஜ் தொழிற்சங்க மாவட்ட துணைத் தலைவர் சாகுல் அமீது, மாவட்ட நிர்வாகி கே .பெரியபட்டி ஜெயம் சக்திவேல் நகர அவை தலைவர் பாலு மாவட்ட தொழிற்சங்க துணைத் தலைவர் ஆர் பி ரவிச்சந்திரன் ரங்கசாமி ஒன்றிய கழகச் செயலாளர்கள் கே குமார் நகரக் கழகச் செயலாளர் ஏ கே கோவிந்தராஜ் டேய் சாதிக் பாச்சா சுப்பன் பாலு ஸ்வீட் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர்.