மறுமலர்ச்சி தி.மு.க.சார்பில்தேர்தல் நிதி வழங்கும் விழா இன்று  திங்கட்கிழமை திருச்சியில் நடைபெற்றது.

மறுமலர்ச்சி தி.மு.க.சார்பில்
திருச்சி மாநகர், திருச்சி புறநகர் வடக்கு,திருச்சி புறநகர் தெற்கு
புதுக்கோட்டை , கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய
மத்திய மண்டலம் சார்பாக
தேர்தல் நிதி வழங்கும் விழா இன்று
திங்கட்கிழமை திருச்சியில் நடைபெற்றது.

துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா தலைமை தாங்கிப்பேசினார்.
விழாவில் முதன்மைச் செயலாளர் துரை வைகோ தேர்தல் நிதி பெற்று சிறப்புரை யாற்றினார். இதில் பொருளாளர். செந்திலதிபன், வழக்கறிஞர் சின்னப்பா எம்.எல்.ஏ., ஆகியோர் சிறப்புரை யாற்றினர். விழாவில் மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு. டி.டி.சி.சேரன், மணவை தமிழ்மாணிக்கம்,
மாத்தூர் கலியமூர்த்தி, ஆசை சிவா, ஜெயசீலன், ராமநாதன் ஆகியோர் நிதி வழங்கி பேசினர்.

இந்தக் கூட்டத்தில் மத்திய மண்டலத்தைச் சேர்ந்த மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்