திருச்சிக்கு வருகை தந்த கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் 100க்கும் மேற்பட்டோர் கைது.

திருச்சிக்கு வருகை தந்த கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினர்
சாலை மறியல் 100க்கும் மேற்பட்டோர் கைது.

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் தனியார் கல்லூரியில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சிக்காகவும் அதனை தொடர்ந்து மற்றொரு கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திருச்சிக்கு வருகை தருகிறார்.

இந்நிலையில் மாநில அரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என். ரவி தமிழகத்தை விட்டு வெளியேறிய வலியுறுத்தியும், கம்யூனிஸ்ட் தலைவர்கள், பெரியார், வள்ளலார் மற்றும் காந்தியடிகளை குறித்து தவறாக விமர்சனம் செய்யும் கவர்னரை கண்டித்தும்  இன்று
திருவானைக்காவல் பகுதியில்
கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் மற்றும்
சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு சி.பி.எம் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மறியல்
போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரேணுகா, வெற்றிச்செல்வன், , கார்த்திகேயன், மணிமாறன், மாவட்ட குழு உறுப்பினர்கள் சரஸ்வதி, மோகன், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சேதுபதி, பகுதி செயலாளர்கள் தர்மா, சுரேஷ், வேலுச்சாமி உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 30 நிமிடத்துக்கு மேல் திருவானைக்காவல் பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்