காந்தி நினைவு நாளை ஒட்டி, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி.

காந்தி நினைவு நாளை ஒட்டி, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் எடுத்துக் கொண்டனர்.

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் அண்ணல் காந்தியடிகள் சுட்டு கொல்லப்பட்ட ஜனவரி 30-ந் தேதியான இன்று டி.வி.எஸ்.டோல்கேட்டில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை முன்பு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் “மத நல்லிணக்க உறுதிமொழி” எடுக்கும் நிகழ்வு நடைப்பெற்றது.

மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் முன்னிலை வகித்தார். இந்து மத சைவ வைணவ குருக்கள், அர்ச்சகர்கள்.கிராம கோவில் பூசாரிகள், கிறிஸ்தவ பாதிரியார்கள், இஸ்லாமிய இமாம்கள் உள்ளிட்டவர்கள் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்றனர்
இந்த நிகழ்வில் ,சேகரன் வண்ணை அரங்கநாதன் செந்தில் மற்றும் மாவட்ட ,மாநகர நிர்வாகிகள் , மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர,பேரூர், வட்ட கழக செயலாளர்கள், மாவட்ட – மாநகர அணி அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்