கேலோ இந்தியா களரி பயட்டு போட்டி: கேரளா வீரர், வீராங்கனைகள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றனர்.
கேலோ இந்தியா களரி பயட்டு போட்டி: கேரளா வீரர், வீராங்கனைகள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றனர்.
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு அமைப்பு சார்பில் நடக்கும் களரி பயட்டு போட்டிகள் நேற்று நிறைவு பெற்றது.
ஆண்கள், பெண்கள் பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கேரளா அணி கைப்பற்றியது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, கலெக்டர் பிரதீப்குமார், போலீஸ் கமிஷனர் காமினி ஆகியோர் பரிசு மற்றும் விருதுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய சீனியர் மண்டல மேலாளர் வேல்முருகன், திட்ட அலுவலர் தேவநாதன், போட்டி மேலாளர் பூன்துரா சோமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:
ஆண்கள், பெண்கள் பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கேரளா அணி கைப்பற்றியது.
ஒட்டு மொத்த சாம்பியன்: பெண்கள் பிரிவு: 1. கேரளா 2. டில்லி. 3. அரியானா. ஆண்கள் பிரிவு: 1.கேரளா. 2. அரியானா, 3. டில்லி.
ஹைகிக் பிரிவு: கார்த்திகா (கேரளா), அல்பியா சாபு (கேரளா). அயனா (கேரளா). வாள் சண்டை: ஆண்கள் பிரிவு: முகமது சமீல், சினான் (கேரளா), பிரணவ் ஜிதேஷ், கார்த்திக் நாயர் (அரியானா). ஆதிநாத், ஆரோன் (டில்லி). ஜகரியா இஸ்லாம், துர்பாதிப் சின்கா (அசாம்). பெண்கள் பிரிவு:ஆதித்யா, சதா (கேரளா), ஷிரியா, மேதா சர்மா (டில்லி), சுகானி, சலோனி ஜிவால் (ம.பி), அல்வினா ஜோசப், அஸ்விதா வரதன் (டில்லி).