வன்முறையை ஒழிப்போம் பெண்களை பாதுகாப்போம் ” என்ற தலைப்பில் கோவில்பட்டியில் நடைபெற்ற மாரத்தான் போட்டி – ஆர்வமுடன் திரளான கல்லூரி மாணவிகள்,பெண்கள் பங்கேற்பு
வன்முறையை ஒழிப்போம் பெண்களை பாதுகாப்போம் ” என்ற தலைப்பில் கோவில்பட்டியில் நடைபெற்ற மாரத்தான் போட்டி – ஆர்வமுடன் திரளான கல்லூரி மாணவிகள்,பெண்கள் பங்கேற்பு.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.
கோவில்பட்டி நகராட்சி ராமசாமி தாஸ் நினைவு பூங்கா முன்பு வன்முறையை ஒழிப்போம் பெண்களை பாதுகாப்போம் ” என்ற தலைப்பில் தொடங்கிய மாரத்தான் போட்டியை கோவில்பட்டி டி.எஸ்.பி வெங்கடேஷ், கோவில்பட்டி நகர மன்ற தலைவர் கருணாநிதி, யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், உள்ளிட்டோர் பங்கேற்று கொடியை செய்து துவக்கி வைத்தனர்.

ராமசாமி தாஸ் நினைவு பூங்காவில் இருந்து தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி பார்க் ரோடு , கதிரேசன் கோவில் சாலை, மெயின் ரோடு, புதுரோடு வழியாக சென்று கால்நடை மருத்துவமனை அருகே நிறைவடைந்தது.
மாரத்தான் விழிப்புணர்வு போட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜி.வி.என் கல்லூரி மாணவிகள்,, பெண்கள் என் ஆர்வமுடன் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.