உய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை உடனடியாக தடுக்க வேண்டும்.கலெக்டரிடம் பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை மனு.

உய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை உடனடியாக தடுக்க வேண்டும்.கலெக்டரிடம் பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை மனு.

பாட்டாளி மக்கள் கட்சி திருச்சி மத்திய மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் க.உமாநாத் தலைமையில் கட்சியினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டரிடம் மனு வழங்கப்பட்டது. அந்த மனுவில், திருச்சி லிங்க நகரில் பொதுமக்கள், மற்றும் பெண்கள் வந்து போகும் மீன் மார்க்கெட் பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுபானக்கடை (மனமகிழ் மன்றம்) வருவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். இதனால் பொதுமக்கள் பெரிதளவு பாதிக்கப்படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு மதுபானக் கடை வருவதை தடுக்க வேண்டும்.

திருச்சி அய்யப்பன் கோவில், ராஜா காலணி பின்புறம் உள்ள பகுதிகளில் அடுக்கு மாடி குடியிருப்புகள், வணிக வளாகத்தின் கழிவுநீரானது உய்யகொண்டான் வாய்க்காலில் கலக்கப்படுகிறது. இதனால் சுகாதரக்கேடு ஏற்படுவதை தடுக்கும் வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருமண்டபம் சக்தி நகர், உய்ய கொண்டான் பகுதியில் உள்ள அனுமதி பெறாத வணிக கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் நீதிமன்றத்தால் இடிக்க உத்தரவிட்டும் இதுவரை இடிக்காமல் இருப்பதை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் கதிர் ராசா, ஜங்ஷன் பகுதி செயலாளர் பாஸ்கர், புத்தூர் பகுதி செயலாளர் செந்தில்குமார், மாவட்ட துணை செயலாளர் வெங்கடேஷ், மாவட்ட இளைஞரணி தலைவர் முப்பீஸ் அஹமது, மானவரணி உவைஸ், பகுதி தலைவர் குரு ஈஸ்வர், மாவட்ட பசுமை தாயக செயலாளர் ஸ்ரீதர், எ. புதூர் பகுதி அப்பாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்