பிரதமர் உள்ளிட்டவர்களுக்கு 5-நட்சத்திர @Marriottல் விருந்து_ மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான உணவு குப்பை வண்டியிலா….?
பிரதமர் உள்ளிட்டவர்களுக்கு 5-நட்சத்திர @Marriottல் விருந்து_ மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான உணவு குப்பை வண்டியிலா….?

பாரத பிரதமர் புண்ணிய பூமியான ஸ்ரீரங்கம் அரங்கநாதரை தரிசிக்க இன்று திருச்சி வருகைபுரிந்துள்ளார். ஆனால் பாரத பிரதமர் திருச்சி வருவதற்கு முன்பாக அவருடைய பாதுகாப்பிற்காக வந்துள்ள அதிகாரிகளுக்கு மூன்று வேலையும் திருச்சியில் மிக பெரிய ஐந்து நட்சத்திர விடுதியான Courtyard (எ) Marriottலிருந்து உணவு செல்கிறதாம்.
ஆனால் அதே வேலையில் பாரத பிரதமரின் வருகைக்காக தூய்மை பணியை மேற்கொண்டுள்ள திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவு “மாநகராட்சியின் குப்பை வண்டியில் சென்றுள்ளது” உள்ளபடியே வேதனையளிக்கிறது.

மேலும் (20.01.2024) ந் தேதி பிரதமர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுமார் 3500-காவலர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவும் தரம் குறைவாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுகிறது. இதே போன்றொரு குற்றச்சாட்டு கடந்த முறை பாரத பிரதமர் திருச்சி பன்னாட்டு முனையத்தை துவக்கிவைக்கும் பொழுதும் உணவின் தரம் குறித்து குற்றசாட்டு எழுந்தது குறிப்பிடதக்கது.
எனவே திருச்சி மாநகராட்சி ஆணையரும், திருச்சி மாநகர காவல் ஆணையரும் மேற்படி சம்பவம் குறித்து தீர விசாரித்து சம்மந்தபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம்.
பாரத பிரதமரின் பாதுகாப்பு எவ்வளவு முக்கியமோ. அதை போன்று பிரதமரை பாதுகாக்கிற காவலர்களையும், தூய்மையை மேம்படுத்துபவர்களையும் நாம் காக்க வேண்டியது நமது கடமை. என்று மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் செயலாளர் வக்கீல்.Ra.கிஷோர்குமார், தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.