அமைச்சர் கே.என்.நேரு அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா. கோலாகல கொண்டாட்டம் -3000 பேருக்கு வேஷ்டி, சேலை, கரும்பு வழங்கப்பட்டது..
அமைச்சர் கே.என்.நேரு அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா. கோலாகல கொண்டாட்டம் -3000 பேருக்கு வேஷ்டி, சேலை, கரும்பு வழங்கப்பட்டது..
தமிழர் திருநாளான பொங்கல் திருநாளான நேற்று தமிழக முழுவதும் கொண்டாடப்பட்டது
அந்த வகையில் திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் சமத்துவ பொங்கல் என வண்ணப் பொடிகளால் எழுதிய கோலங்கள், மயிலாட்டம், ஒயிலாட்டம், செண்டை மேளம், தாரை தப்பட்டை மற்றும் பேண்ட் வாத்தியங்கள், என கோலாகலமாக கொண்டாடப்பட்டது,
மேலும் தமிழர்களின் பாரம்பரிய உடையில் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் ஆகியோர் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.
முன்னதாக பொங்கல் திருநாளை முன்னிட்டு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேருவை சந்தித்து வாழ்த்து பெற்றார்..
இதனைத் தொடர்ந்து 3000 பேருக்கு வேஷ்டி சேலை, கரும்பு மற்றும் கலைஞரின் கடிதங்கள் என்ற புத்தகமும் வழங்கப்பட்டது.
இந்த சமத்துவ பொங்கல் விழாவில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மேயர் அன்பழகன்,சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள், மண்டல குழு தலைவர்கள், என ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..