பிரபல பாடகி பிரபா ஆத்ரே மாரடைப்பால் காலமானார்.

பிரபல பாடகி பிரபா ஆத்ரே மாரடைப்பால் காலமானார்.

புகழ்பெற்ற பாடகி பிரபா ஆத்ரே (92) இன்று காலை மாரடைப்பால் காலமானார். புனேவில் உள்ள அவரது இல்லத்தில் உறக்கத்தின்போது அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.  உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டவர் அதிகாலை 5.30 மணிக்கு உயிரிழந்தார்.

1932-ல் பிறந்த ஆத்ரே, பன்முகங்களைக் கொண்ட ஆளுமையாக திகழ்ந்துள்ளார். ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் புகழ்பெற்ற “கிரானா கரானா” இசை பள்ளியைச் சேர்ந்த இவர், இசைக் கலைஞராக மட்டுமில்லாமல் அறிவியல், சட்டம் ஆகியவற்றிலும் பட்டம் பெற்றுள்ளார்.

இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது  2022-ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. 1990-ல் பத்மஸ்ரீ விருதும் 2002-ல் பத்ம பூஷன் விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி

இந்திய அரசின் உயரியவிருதான மூன்று பத்ம விருதுகளையும் பெற்றுள்ளவர்.

பிரபா ஆத்ரே மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்