அரசு டவுன் பஸ்சுக்குள் மழைநீர் ஒழுகியதால் மழை நிற்கும் வரை காத்திருந்து ஏறிச் சென்ற பயணிகள். இது ஆண்டிப்பட்டி துயரம்.

அரசு டவுன் பஸ்சுக்குள் மழைநீர் ஒழுகியதால் மழை நிற்கும் வரை காத்திருந்து ஏறிச் சென்ற பயணிகள். இது ஆண்டிப்பட்டி துயரம்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இருந்து தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டிக்கு அரசு டவுண் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு டவுண் பஸ்கள் போதிய பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் உள்ளது.

இந்த நிலையில் ஆண்டிபட்டி நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. அப்போது ஆண்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த உசிலம்பட்டி செல்லும் டவுண் பஸ்சில் மேற்கூரையில் இருந்து மழை நீர் பஸ்சுக்குள் ஒழுகியது.

பஸ்சில் பயணிகள் அமரும் இருக்கையில் மழைநீர் கொட்டியது.

அதிகமான மழைநீர் ஒழுகியதால் , மழை நிற்கும் வரை பயணிகள் யாரும் அரசு பஸ்சில் ஏறவில்லை.
பஸ் பழுது காரணமாக தள்ளி விட்டு இயக்கும் நிலை ஏற்படும் என்பதால், பஸ்சை இயக்கிய நிலையிலேயே ஓட்டுனரும் நடத்துனரும் மழை நிற்கும் வரை நிழற்குடைகளில் காத்திருந்தனர்.

மழை நின்ற பின் பயணிகள் ஏற்றப்பட்டு பஸ் உசிலம்பட்டி புறப்பட்டு சென்றுள்ளது. இரண்டு மாவட்டங்களுக்கு இடையே கிராமப்புறங்கள் வழியாக செல்லும் வழித்தடத்தில் புதிய அரசு பஸ் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்