காலியாகிறது ஒ.பி.எஸ் கூடாராம். திருச்சியில் வலுவாகிறது அதிமுக அணி.

காலியாகிறது ஒ.பி.எஸ் கூடாராம். திருச்சியில் வலுவாகிறது அதிமுக அணி.

திருச்சியைச் சேர்ந்த ராஜ்குமார், இரண்டு முறை அரசு வக்கீலாக இருந்தார். அ.தி.மு.க.,வில் வக்கீல் பிரிவு மாநில இணை செயலராக இருந்த நிலையில், தீவிரமாக கட்சி பணி ஆற்றினார். அரசு வக்கீலாகவும் இருந்து  அவருடைய பணி மிக சிறப்பாக இருந்தது. பின்னர்  ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் என இரண்டு அணிகள் பிரிந்த பின் ராஜ்குமார் ஒ.பி.எஸ் அணி பக்கம் சேர்ந்து அ.தி.மு.க., உரிமை மீட்புக்குழுவில் சேர்ந்தார். அங்கு திருச்சி மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பதவி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அண்மையில் ஒரு பேட்டியில் ஓ.பி.எஸ்., கூறுகையில், தி.மு.க., வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று திமுக ஆதரவு நிலை எடுத்து பேசினார். அதற்கேற்றார் போல் ஒ.பி.எஸ் அணியின் எம்.எல்.ஏவான ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் திமுகவிற்கு தாவினார். இந்த செயல் உரிமை மீட்புக்குழு நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. உண்மையான தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் ஒ.பி.எஸ் அணியில் உள்ள பலரும், இ.பி.எஸ் அ.தி.மு.க.,வுக்கு தாவ தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் திருச்சி மாநகர் மாவட்ட அவைத்தலைவர் வக்கீல் ராஜ்குமார், நேற்று முன்தினம், அ.தி.மு.க., மாநகர் மாவட்ட செயலர் சீனிவாசன் ஏற்பாட்டில்,  சேலம் சென்று பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தார். அவருடன், உரிமை மீட்புக்குழுவின் மேற்கு தொகுதி அமைப்பாளர் பால்ராஜ் உள்ளிட்ட பலரும் அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளனர்.

இதுகுறித்து வக்கீல் ராஜ்குமார் கூறுகையில், ‘‘விரைவில் பல முன்னாள் அமைச்சர்கள் அ.தி.மு.க.,வுக்கு திரும்புவர். அவர்கள் தலைமையில் அனுமதிக்காக காத்துள்ளனர். அ.தி.மு.க., தான் முக்கியம். அதை விடுத்து, தி.மு.க., ஜெயிக்கும் என்று ஓ.பி.எஸ்., கூறியதை ஏற்க முடியவில்லை. ஆகையால் அ.தி.மு.க.,வுக்கு வந்து விட்டோம். உரிமை மீட்புக்குழு கூடாரம் விரைவில் காலியாகும்,’’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்