புளியங்குடியில் கடையில் இருந்து பணம் திருடிய நபர் அதிரடி கைது.

புளியங்குடியில் கடையில் இருந்து பணம் திருடிய நபர் அதிரடி கைது.

தென்காசி மாவட்டம், 16.08.2025 அன்று புளியங்குடியில் அமைந்துள்ள ஓர் கடையில் மர்ம நபர் ஒருவர் கடைக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு வைத்திருந்த பணத்தை திருடி சென்றதாக கடையின் உரிமையாளர் ஷேக் மொய்தீன் புளியங்குடி காவல் நிலையத்தில் கொடுத்தார்

புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் திரு. ஷாம்சுந்தர் அவர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு. மாடசாமி ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு மேற்படி கடையில் இருந்து பணத்தை திருடிய ராஜபாளையம், அயன் கொல்லன் கொண்டான் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அய்யனார் என்பவரின் மகன் பொன்ராஜ் வயது 42 என்ற நபரை ராஜபாளையத்தில் வைத்து அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் அவர் திருடி சென்ற பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினரை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்