ஜேசிபி வாகன ஓட்டுனர் அலட்சியத்தால் மதுரையை சேர்ந்த காவேரி கலைக் கல்லூரி மாணவி திருச்சியில் படுகாயம்
ஜேசிபி வாகன ஓட்டுனர் அலட்சியத்தால் மதுரையை சேர்ந்த காவேரி கலைக் கல்லூரி மாணவி திருச்சியில் படுகாயம்.
தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த மகேஸ்வரி (வயது 22) என்பவர் காவேரி கலைக் கல்லூரியில் நுண்கலை பட்டப் படிப்பு பயின்று வருகின்றார்.
இவர் இன்று மதியம் 1.15 மணியளவில் திருச்சி to கரூர் மெயின் ரோடு,
கம்பரசம்பேட்டை பெரியார் நகர் அருகில் தன்னுடைய Honda Dio scooty வாகனத்தை ஓட்டி வந்த நிலையில் தனிநபர் இடம் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஜே.சி.பி. இயந்திரத்தை ஓட்டுநர் ஐயப்பன் கவனக்குறைவாக வண்டியை பின்னோக்கி எடுக்கும் போது மாணவி ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மீது பலமாக மோதியதில் மாணவி மகேஸ்வரிக்கு படுகாயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அட்லஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ஜீயபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்