நள்ளிரவு நேரத்திலும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக களத்தில் இறங்கிய கவுன்சிலர்.

நள்ளிரவு நேரத்திலும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக களத்தில் இறங்கிய கவுன்சிலர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி 8-வது வார்டு ஜண்டமாடு பகுதியில், நள்ளிரவு சுமார் 11.30 மணியளவில் சாலையில் ஏற்பட்டிருந்த பள்ளத்தை சரிசெய்ய, நகராட்சி கவுன்சிலர் முஹம்மத் நௌமன் நேரடியாக களத்தில் இறங்கிய சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

நல்மா மெடிக்கல் அருகே சாலையில் ஏற்பட்டிருந்த பள்ளத்தால், பொதுமக்கள் சிலர் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதியில் மேலும் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில், நகரமன்ற உறுப்பினர் முஹம்மத் நௌமன் இரண்டு மூட்டை எம்-சாண்டை கொண்டு வந்து பள்ளத்தில் கொட்டி தற்காலிகமாக சீரமைத்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இரவு நேரத்திலும் உடனடியாக நடவடிக்கை எடுத்த நகரமன்ற உறுப்பினரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

எனினும், எம்-சாண்ட் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த சீரமைப்பு தற்காலிகமானது என்பதால், சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சாலையை நிரந்தரமாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்