ரயில் பயணிகள் கவனத்திற்கு… 160 மின்சார ரயில்கள் ரத்து; 45 நாட்களுக்கு புதிய அட்டவணை

ரயில் பயணிகள் கவனத்திற்கு… 160 மின்சார ரயில்கள் ரத்து; 45 நாட்களுக்கு புதிய அட்டவணை

சென்னை எக்மோர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.10, 11 நடைமேடையில் இருந்து இயக்கப்பட்டுவரும் மின்சாரரயில்கள் 5 மற்றும் 6 எக்ஸ்பிரஸ் ரயில்நடைமேடைக்கு மாற்றப்பட்டுள்ளது

பிப்.20-ம்தேதி முதல் அனைத்து மின்சார ரயில்களும் 5 மற்றும் 6-வது நடைமேடையில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 45 நாட்கள் புதிய கால அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இது பயணிகளுக்கு பல்வேறு வழிகளில் சிரமங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு இடையே பயணிக்கும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட கூடும் என்று கருதப்படுகிறது. இந்த வழித்தடத்தில் தினமும் 320 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது 164 மின்சார ரயில்கல் மட்டுமே இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 160 மின்சார ரயில் சேவை குறைக்கப்பட்டு உள்ளது. இதுவரையில் இயக்கப்பட்டு வந்த மொத்த சேவையில் பாதி சேவை குறைக்கப்பட்டு இருப்பதால் பயணிகள் அதிகம் பாதிக்க வாய்ப்பு உள்ளது.

கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு 20 ரயில் சேவையும், செங்கல்படிற்கு 35 ரயில்களும் இயக்கப்பட உள்ளன. இது வழக்கமாக இயக்கப்படும் ரயில் சேவையை விட மிக குறைவாகும். மின்சார ரயில்கள் குறைக்கப்பட்டு இருப்பதால், தாம்பரம் – செங்கல்பட்டு – மார்க்கத்தில் கூடுதலாக பேருந்து சேவையை அதிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. அரசு, தனியார் நிறுவன பணியாற்றக்கூடிய ஆயிரக்கணக்கான ஊழியர்கள், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் கடும் பாதிப்பை சந்திக்க கூடும். எனவே இந்த 45 நாட்களும் பயணத்தை திட்டமிடுவது அவசியமாகும்.

தொடர்ந்து, ரயில் பயணிகளின் வசதிக்காக மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) சார்பில் முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் மற்றும் கூடுவாஞ்சேரி வரை தடம் எண் E18 மற்றும் 18A ஆகிய வழித்தடங்களில் மொத்தம் 44 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில் சேவை மாற்றத்தால் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

ராயபுரம் (தற்காலிக பேருந்து நிலையம்) – கிளாம்பாக்கம்: கூடுதலாக 35 பேருந்துகள் இயக்கப்படும்.

பல்லாவரம் – செங்கல்பட்டு (தாம்பரம் வழியாக): கூடுதலாக 15 பேருந்துகள் இயக்கப்படும்.

வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து மொத்தம் 50 கூடுதல் பேருந்துகள் பயணிகளின் சேவைக்காக இயக்கப்பட உள்ளன.

பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு, முக்கிய பேருந்து நிலையங்களில் போக்குவரத்துக் கழக அலுவலர்களை நியமித்து இந்தப் பேருந்துகளின் இயக்கத்தைக் கண்காணிக்கவும், தேவைப்பட்டால் மேலும் கூடுதல் பேருந்துகளை இயக்கவும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

இந்த அறிவிப்பை சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் இணை இயக்குநர் (மக்கள் தொடர்பு) வெளியிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்