ஸ்ரீரங்கம் மூன்றாம் நாள் இராப் பத்து உற்சவம்* *முத்துக்கோண கொண்டையுடன் ஸ்ரீ நம்பெருமாள் தரிசனம்*
ஸ்ரீரங்கம் மூன்றாம் நாள் இராப் பத்து உற்சவம்* *முத்துக்கோண கொண்டையுடன் ஸ்ரீ நம்பெருமாள் தரிசனம்*
*ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோயிலில்* *நடைபெற்று வரும் பெரிய* *திருவிழாவான*
*வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் இராப் பத்து உற்சவத்தின் திருவாய் மொழித்*
*மூன்றாம் திருநாளான இன்று*
*உற்சவர்*
*ஸ்ரீ நம்பெருமாள்*
*முத்து கோணக்* *கொண்டை சாற்றி;*
*அதில்* *கலிங்கத்துராய், சிகப்பு கல் பட்டை சரம் அணிந்து*;
*திருமார்பில் பங்குனி உத்திர பதக்கம்; அதன் மேல் ஸ்ரீ ரங்க நாச்சியார் பதக்கம்; அழகிய மணவாளன் பதக்கம்; சிகப்பு கல் சூர்ய* *பதக்கம் தொடங்கி வரிசையாக சிகப்புக் கல் அடுக்கு பதக்கங்கள்;*
*சின்னக்கல் ரத்தின அபய ஹஸ்தம்; நெல்லிக்காய்* *மாலை; தங்க பூண் பவழ மாலை; 8 வட முத்து மாலை;*
*கிளி பச்சை வர்ண பட்டு உடுத்தி*;
பின் சேவையாக – கண்ட பேரண்ட பக்ஷி பதக்கம் ; புஜ கீர்த்தி ; தாயத்து சரங்கள் அணிந்து சேவை சாதித்து
வருகின்றார்.