கொடைக்கானலில் இறந்த குட்டியுடன் சுற்றித்திரியும் தாய் குரங்கு பதறவைக்கும் சோகம்.
கொடைக்கானலில் இறந்த குட்டியுடன் சுற்றித்திரியும் தாய் குரங்கு பதறவைக்கும் சோகம்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள முக்கிய சுற்றுலா இடமான பைன்மரக்காடு பகுதியில் தான் அந்த குரங்கு, தனது குட்டியுடன் சுற்றித்திரிந்தது.
அப்போது குட்டி குரங்கு பெரிய மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தது. இதில், அந்த குட்டி குரங்கு இறந்துவிட்டது. ஆனால் குட்டி இறந்தது தெரியாமல் தாய் குரங்கு, அதனை தனது அரவணைப்பில் வைத்துக்கொண்டு வனப்பகுதி முழுவதும் சுற்றித்திரிகிறது. அந்த குரங்கை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் பரிதாபத்துடன் பார்த்துச்செல்கின்றனர்.