அழைக்கிறார் உவரியார். மதுரையை மலைக்க வைக்க போகும் மீனவ சமுதாய ஆலோசனை கூட்டம்.
அழைக்கிறார் உவரியார்.
மதுரையை மலைக்க வைக்க போகும் மீனவ சமுதாய ஆலோசனை கூட்டம்.
வருகின்ற சனிக்கிழமை மாலை 3 மணியளவில் மதுரை மாட்டு தாவனி பேருந்து நிலையம் எதிரே உள்ள மலர் ரெசிடென்சியில், மீனவ தலைமைகளின் சங்கமம் ஆனது. தமிழ்நாடு, புதுச்சேரி மாநில மீனவர் சமுதாய பாதுகாப்பு கமிட்டி வழிநடத்தலுடன் பாரம்பரிய மீனவர் பழங்குடியின அரசானைகுழு மற்றும் தமிழக பரதவ தலைவர்கள், மற்றும் ஒருங்குணைப்பு குழு நிர்வாகிகள் பங்கு பெறும் அறிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் தமிழக – புதுச்சேரி மாநில அனைத்து மீனவ இன இயக்க சங்க கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்வதோடு, மீனவ இன கள போராளிகள், இன பற்றாளர்கள், ஆர்வலர்கள் என்று பலரும் கலந்து கொள்கின்றனர்.
இந்த கலந்துரையாடல் கூட்டத்திற்க்கு அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என்று தமிழ் மீனவ கூட்டமைப்பு
மாநில ஒருங்கிணைப்பாளர்
உவரி எழிலன் அவர்கள் தெரிவித்துள்ளார்.